logo


Home கேள்விப்பத்திரங்கள்
"ஜைக்கா கருத்திட்டத்தின்” ஊடாக அ.ம.உ. கூட்டுத்தாபனத்தின் ஆற்றலை மேம்படுத்தல்
அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் (அ.ம.உ.கூ) ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாக 1987ஆம் ஆண்டு ஜப்பானிய ஒத்துழைப்பு முகவர் (ஜைக்கா) உடாக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கு ஜப்பான் வழங்கிய நன்கொடையாகும். அதன் பின்னர் ஜைக்கா 1991 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் அ.ம.உ. கூட்டுத்தாபனத்துக்குத் தேவையான ரூபா 10 மில்லியன் பெறுமதியான உதிரிப்பாகங்களை இரண்டு தடவைகள் வழங்கியதன் மூலம் அதன் ஒத்துழைப்பை நல்கியது. மேலும், இலங்கையின் மருந்தாக்கற் பொருட்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆண்டொன்றுக்கு 4,000 குளிகைகள் மற்றும் கூட்டுக் குளிகைகளாக அதன் உற்பத்தி ஆற்றலை மேம்படுத்துவதற்காக புதிய இயந்திரங்களைப் பொருத்துதல், உற்பத்தி வலயத்தைப் புதுப்பித்தல், களஞ்சியக் கட்டிடங்களை நிர்மாணித்தல் ஆகியவற்றுக்காக ஜைக்கா ஊடாக 1,244 ஜப்பானிய யென் பெறுமதியான கடனை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் சம்மதித்தது. இந்தக் கருத்திட்டம் 2016ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்படும்.
 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
13-12-2017 04:05