logo


Home எம்மைப்பற்றி அ.ம.உ.கூட்டுத்தாபனத்தின் (SPMC) வரலாறு
அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வரலாறு
தரமானதும் பயனுறுதியானதும் பாதுகாப்பானதுமான மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் ஜைக்கா (ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர்) ஊடாக ஜப்பானிய அரசாங்கத்தின் நன்கொடையின் உதவியுடன் 1987ஆம் ஆண்டு அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்டது. இந்த தூரநோக்குள்ள தீர்மானம் 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பிபிலே விக்கிரமசிங்க அவர்களின் முன்மொழிவின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டது.2005ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “மஹிந்த சிந்தனையில்” இலங்கையில் உயர் தரத்திலான அத்தியாவசிய மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்குடன் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தை வலுவூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ப்படும் என்று குறிப்பிட்டதன் மூலம் நாட்டில் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் முக்கியத்துவம் மீள்வலியுறுத்தப்பட்டது.49ஆம் இலக்க கைத்தொழில் கூட்டுத்தாபனச் சட்டத்தினால் ஆணையிடப்பட்டவாறு அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் பிரதான பணிகளாவன:
மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்தல், பதனிடல், களஞ்சியப்படுத்தல், பொதியிடல் மற்றும் மீள் பொதியிடல்.
மருந்துப் பொருட்களின் உற்பத்தி மற்றும் பதனிடலுக்கான தொழில்நுட்ப உதவியை வழங்குதல்
மருந்தகவியல் மற்றும் மருந்தாக்கல் ஆராய்ச்சிகளை மேற்கொள்தல் மற்றும் மருந்துப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தல்
மருந்துப் பொருட்களை சந்தைப்படுத்தல்
 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
13-12-2017 04:05