logo


Home அ.ம.உ.கூ.வின் சேவைகள் தரக்கட்டுப்பாடு
தரக்கட்டுப்பாட்டுத் திணைக்களம்
imageimageimageimageimageimageimage
தரக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் சுயாதீனமான உள்ளக ஒழுங்குபடுத்தல் குழுமம் ஆகும்.அதன் ஒட்டுமொத்தப் பணி முழுமையான தர முகாமைத்துவ முறைமை மற்றும் சிறந்த உற்பத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தரக்கட்டுப்பாட்டையும் நிறுவனத்தின் தர உறுதிப்படுத்தல் நடவடிக்கை முறையையும் உள்ளடக்குகின்றது.அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் நவீன பகுப்பாய்வுக் கருவிகள் மற்றும் நுண்ணுயிரியல் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பிரித்தானிய மற்றும் ஐக்கிய அமெரிக்க மருந்தகவியல் தேவைப்பாடுகளுக்கும் உள்ளக மூலப்பிரமாணங்களுக்கும் அமைவாக பயிற்றப்பட்ட ஒரு பணியாளர் குழு பல்வகையான பகுப்பாய்வு முறைமைகளை மேற்கொள்கின்றது.உற்பத்தி நடைமுறையில் உள்ள பொருட்கள் மற்றும் முடிவுப் பொருட்கள் ஆகிய எல்லா ஆரம்பப் பொருட்களினதும் நடைமுறையில் உள்ள பொருட்களினதும் தர உத்தரவாதம் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு முன்னர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன. எல்லா பொதியிடல் நடவடிக்கைக் கூறுகள் மீதும் நீர்ப்பகுப்பாய்வுப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. மேலே சொல்லப்பட்ட செயற்பாடுகளுக்கு மேலதிகமாக முடிவுப் பொருட்களுக்கான சாதாரண மற்றும் துரித நிலைமைகளை உள்ளிட்ட உறுதிப்படுத்தல் ஆய்வுகள் கிரமமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக தொழிற்சாலையின் தூய்மை, பெனிசிலின் குறுக்கு அழுக்காதல் (cross contamination), வாய்மூல மருந்தாக்கற் பொருட்கள் மீதான நுண்ணுயிரிகளின் அனுமதிக்கப்பட்ட எல்லை (Microbial limits) ஆகிய ஜப்பானிய சுகாதார அமைச்சு நியமங்கள் பின்பற்றப்படுகின்றன.
Contact person
Kuruppu K.D.A
Manager - Quality Control
Office Direct : 011 - 5512945
Office : 011 - 2637574 , 2635353 , Ext. 313
E-Mail - இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

Go Back

 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
13-10-2017 09:23