logo


Home எம்மைப்பற்றி அ.ம.உ.கூட்டுத்தாபனத்தைப் (SPMC) பற்றி
அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தைப் பற்றி
அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் 1957ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க கைத்தொழில் கூட்டுத்தாபனச் சட்டத்தின் கீழ் 1987ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது. அது 2013ஆம் ஆண்டில் குறைந்த விலையில் இலங்கை மக்களின் சுகாதாரப் பராமரிப்புக்கான தரமானதும் பயனுறுதியானதும் பாதுகாப்பானதுமான அத்தியாவசியமான மருந்துப் பொருட்களின் வர்த்தக ரீதியான உற்பத்தியில் 13 வருடங்களைப் பூர்த்தி செய்தது.அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய உற்பத்தி வீச்சு 46 குளிகைகள் மற்றும் கூட்டுக் குளிகைகளை உள்ளடக்கியதாகும். இலங்கையில் மருந்தாக்கற் பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரேயொரு அரச துறை கூட்டுத்தாபனம் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனமாகும். சந்தைக்கு விடுவிக்கப்படும் எல்லா உற்பத்திப் பொருட்களும் பிரித்தானிய மருந்தகவியல் (BP) / ஐக்கிய அமெரிக்க மருந்தகவியல் (BP) தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்கின்றன. தற்போதைய சிறந்த உற்பத்தி நடவடிக்கைகளின் (cGMP) ஒழுங்குவிதிகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவை உள்ளக தர ஆய்வு மற்றும் தொழிற்சாலைப் பரிசோதனைகள் மூலம் கிரமமாகக் கண்காணிக்கப்படுகின்றன. அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் உற்பத்தி வசதிகள் நவீன ஜப்பானிய, ஜேர்மன் மற்றும் கொரிய இயந்திரங்களைக் கொண்டுள்ளன. அதன் உற்பத்தி வசதி அதீத தூய சுற்றாடலைக் கொண்டு இயங்குவதுடன் அது உலக சுகாதார தாபனத்தினால் (WHO) விதிக்கப்பட்டவாறு cGMP தேவைப்பாடுகளுக்கு இணங்கி ஒழுகுகின்றது. எமது நவீன வசதிகளைக் கொண்ட வடிவமைப்பு அபிவிருத்தித் திணைக்களத்தில் வகுக்கப்பட்ட எமது சொந்த மருந்தக சூத்திரங்களையே நாம் பயன்படுத்துகின்றோம்.1987ஆம் ஆண்டில் கம்பனி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து உற்பத்தியின் தரத்தின் மீதும் ஊழியர்களிடையே சமத்துவத்தை நிலைநாட்டுவதிலும் கவனம் செலுத்தும் ஜப்பானிய கலாசாரம் ஓரளவு இங்கு செல்வாக்குச் செலுத்தியது. இதன் விளைவாக, தரமான மருந்தாக்கற் பொருட்களின் உற்பத்தியாளர் என எமது நற்பெயரைக் கட்டியெழுப்புவதற்கு உதவிய ஈடு இணையற்ற குழு மனப்பாங்கையும் குழுச் செயற்பாட்டையும் கொண்ட ஒரு நிறுவனத்தை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். அதுவே எமது வெற்றியின் பின்புலத்தில் உள்ள மிகவும் பயனுறுதியான உந்துசக்தியாகும்.

 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
13-10-2017 09:23