logo


Home அ.ம.உ.கூ.வின் சேவைகள் சூத்திர ஆராய்ச்சியும் அபிவிருத்தியும்
வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி
imageimageimageimageimage
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் ஊடாக தொடர்ச்சியான உற்பத்தி உச்ச மயப்படுத்தல் எமது உற்பத்தியின் கிரமமான ஓர் அம்சமாகும். அத்துடன் நாம் உயர் தரத்தைப் பேணுவதற்கான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளோம். அதற்கிணங்க, வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதான பணிகளாவன
புதிய உற்பத்திகளை உருவாக்கி தற்போதைய உற்பத்தி நடைமுறைக்கு அறிமுகப்படுத்தல். இது உற்பத்தி வடிவமைப்பு, நடவடிக்கைமுறை நிர்ணயம், பொதியிடல் வடிவமைப்பு, பிரித்தானிய மற்றும் ஐக்கிய அமெரிக்க உள்ளக மூலப்பிரமாணங்களுக்கு அமைவாக இருப்பதற்காக உறுதிப்பாட்டு மதிப்பீடுகள், உற்பத்திப் பதிவு மற்றும் உற்பத்தி அளவுகளுக்கேற்ப வரை அளவிடல் ஆகியவற்றை உள்ளடக்கும்.
தற்போதுள்ள உற்பத்திகளின் / உற்பத்தி நடவடிக்கைகளின் மேம்பாடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் தற்போதுள்ள உற்பத்தி வடிவமைப்புகளின் குறைகளை களைதல். வடிவமைப்பு மேம்பாடுகள், நடவடிக்கைமுறை விருத்திகள் மற்றும் உறுதிப்பாட்டு விரிவாக்கம் மற்றும் விலை உச்சமாக்குதல் ஆகியவற்றை இவை உள்ளடக்கும்.
உற்பத்தி நடவடிக்கைகளின் உறுதிப்பாட்டை மேற்கொள்ளுதல். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கை ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைமுறைகள் ஊடாக தேவைப்படும் தரத்திலான உற்பத்திகளை மேற்கொள்வதற்கு வடிவமைப்பு மற்றும் நடவடிக்கைகளின் இயலுமையை நிரூபிப்பதற்காகவே இது மேற்கொள்ளப்படுகின்றது.
அவசியமானவிடத்து கிளினிகல் சோதனை / உயிரச்சமநிலைச் (bioequivalence) சோதனைகள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு ஏனைய நிறுவனங்களுடன் ஒத்துழைத்தல்.
Contact person
Mrs. Ratnayake H.C
Manager - Formulation cum Research and Development
Office Direct : 011 - 5012950
Office : 011-2637574, 2635353 , Ext. 316 , 317
E-Mail - இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

Go Back

 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
13-10-2017 09:23