logo


Home
கனவு நனவாகியது
1970களில் இலங்கையர்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக அரசுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றைத் தாபிப்பது பற்றி பேராசிரியர் சேனக பிபிலே பிரேரித்தார். 1987ஆம் ஆண்டில் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் (SPMC) தாபிக்கப்பட்டதன் மூலம் இந்தக் கனவு நனவாகியது.
அ.ம.உ.கூ உங்களை வரவேற்கின்றது
அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் இலங்கையில் உள்ள மிகப் பெரிய மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்தி நிறுவனமாகும். அது பரந்த அளவிலான உயர் தர பொதுப்படையான உற்பத்திகளை வாய்மூல திண்ம வடிவில் தயாரிக்கின்றது.அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் ஜப்பானிய நிதி உதவியுடன் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) ஒரு பிரிவாக தாபிக்கப்பட்டு இலங்கை சுகாதார அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. அ.ம.உ. கூட்டுத்தாபனத்தின் ஒவ்வொரு பிரிவும் உலக சுகாதார தாபனத்தின் வழிகாட்டலின் கீழ் தேவைப்படுத்தப்படும் தற்போதைய சிறந்த உற்பத்தி நடைமுறைகளுக்கு அமைவாக இருக்கின்ற அதே வேளை, மருந்துகளின் தரம் பிரித்தானிய மற்றும் ஐக்கிய அமெரிக்க மருந்தகவியல் நியமங்களுக்கு அமைவாக உள்ளன. தற்போது அ.ம.உ.கூ. அதன் தற்போதைய உற்பத்தி இயலளவை விரிவாக்கம் செய்வதற்காக ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையுடன் (JICA) இணைந்து செயற்படுகின்றது.தினமும் எமது மருந்துப் பொருட்களை நம்பியிருக்கும் மக்களுக்கு நாம் பொறுப்புமிக்கவர்களாவோம். நீங்கள் ஒரு வைத்தியராகவோ, மருந்தகவியலாளராகவோ அல்லது நோயாளியாகவோ இருப்பினும் சரி இலங்கை அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தைப் பற்றி தாங்கள் மேலும் அறிந்து கொள்வதற்கான உங்கள் தனிப்பட்ட ஒரு மூலமாக இந்த இணையத் தளத்தை ஆக்கிக் கொள்ளுங்கள்.
 


எதிர்வரும் நிகழ்ச்சிகள்

விநியோகத்தர்கள்

பார்வையாளர் கருமபீடம்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter




Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
09-06-2017 03:40